புடின் ஒரு அரக்கன்! கனடா பிரதமர் கோபம்

ரஷ்ய அதிபர் புடினை அரக்கன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்தான்,தற்போது உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கு ரஷ்ய அதிபர் புடின்தான் காரணம் என வெளிப்படையாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாட்டு தலைவர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வரிசையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இணைந்துள்ளார்.
அலெக்ஸி நவல்னி மரணம் குறித்து பேசிய அவர், “நவல்னியின் மரணம் ஒரு சோகம். ரஷ்ய மக்களின் சுதந்திரத்திற்காக போராடும் எவருக்கும் புடின் எவ்வளவு தூரம் நடவடிக்கை எடுப்பார் என்பதை இது காட்டுகிறது. நவல்னியின் மரணம் புடின் ஒரு அரக்கன் என்பதை காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!