Gulf Giants அணி பந்துவீச்சை நொறுக்கிய பூரன் – டேவிட்!

Gulf Giants அணிக்கு எதிரான போட்டியில் MI Emirates 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

International League டி20 தொடர் போட்டியில் Gulf Giants மற்றும் MI Emirates அணிகள் மோதின.

அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் MI Emirates அணி முதலில் ஆடியது.

Gulf அணியின் அபார பந்துவீச்சில் ரன் எடுக்க திணறிய MI அணி, 12 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அப்போது கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ராயுடு கூட்டணி அதிரடியில் இறங்கி ஸ்கோரை உயர்த்தியது.

பூரன் 51 (28) ரன்களும், ராயுடு 25 (16) ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து சிக்ஸர்களை தெறிக்கவிட்ட டிம் டேவிட் 15 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

MI Emirates 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்தது. Gulf தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய Gulf Giants அணியில் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக 52 ரன்கள் விளாச, ஏனைய வீரர்கள் பரூக்கி பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கடைசி கட்டத்தில் வாணவேடிக்கை காட்டிய ஓவெர்ட்டன் 18 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் Gulf அணி 161 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

MI அணியின் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகளும், போல்ட் 2 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் வாக்கர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!