சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில் வர்த்தமானி வெளியீடு..

எதிர்வரும் காலங்களில் சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி வரை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் வழிபாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கூடாது என விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாத்திரை ஆரம்பமாகும் நிலையில் புகையிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் தற்காலிக அல்லது நிரந்தர வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!