பிரெஞ்சு கோப்பையில் Brest அணியை வீழ்த்தி PSG காலிறுதிக்கு தகுதி

பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது.

PSG (பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன்) மற்றும் Brest (பிரெஸ்ட்) அணிகளுக்கு இடையிலான பிரெஞ்சு கோப்பை போட்டி Parc des Princes மைதானத்தில் நடந்தது.

PSGயின் நட்சத்திர வீரர் கைலியின் எம்பாப்பே (Kylian Mbappe) ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு முதல் கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து எம்பாப்பேயின் சக அணி வீரர் டேனிலோ பெரெய்ரா (Danilo Pereira) 37வது நிமிடத்தில் அசத்தலாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் எம்பாப்பேவுக்கு இரண்டாவது கோல் வாய்ப்பு நழுவியது.

அவர் அடித்த ஷாட் ஒன்று கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் அதிருப்தி அடைந்தார்.

இதற்கிடையில்  Brest அணிக்கு 65வது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. அந்த அணியின் ஸ்டீவ் மௌரின் (Steve Mourine) தன்னிடம் வந்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார்.

இறுதி நிமிடங்களில் (90+2) PSG அணி வீரர் ராமோஸ் (Ramos) அடித்த கோல் வெற்றி கோலாக PSG-க்கு அமைந்தது.

இதன்மூலம் PSG அணி பிரெஞ்சு கோப்பை கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!