Strasbourg அணியை தட்டித் தூக்கிய PSG

லிகு 1 தொடரில் PSG  அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்ட்ராஸ்பர்க் அணியை வீழ்த்தியது.

PSG  மற்றும் Strasbourg அணிகள் மோதிய போட்டி Stade de la Meinau மைதானத்தில் நடந்தது.

PSG அணிக்கு ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே, கோல் போஸ்ட் நோக்கி ஷாட் அடிக்க எதிரணி கோல் கீப்பர் ஒற்றை கையால் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

எனினும், 31வது நிமிடத்தில் PSG அணிக்கு முதல் கோல் கிடைத்தது.

இம்முறை கோல் கீப்பர் சற்று முன்னோக்கி வர, அந்த வாய்ப்பை பயன்படுத்தி கைலியன் எம்பாப்பே அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 49வது நிமிடத்தில் மார்கோ அசென்சியோ PSG-க்கு கோல் அடித்தார்.

கடுமையாக போராடிய  Strasbourg அணியால், 68வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. டிலானே பக்வா அந்த கோலை அடித்தார்.

இறுதியில் PSG 2-1 என்ற கோல் கணக்கில் Strasbourg அணியை வீழ்த்தியது. இது PSG அணிக்கு 14வது வெற்றி மற்றும் 47 புள்ளிகளை பெற்று PSG முதலிடத்தில் நீடிக்கிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!