UEFA லீக்கில் Real Sociedad-ஐ பந்தாடிய PSG

UEFA லீக்கில் Real Sociedad அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி அபார வெற்றி பெற்றது.

Parc Des Princes மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, எம்பாப்பே அடித்த ஷாட் ஒன்றை எதிரணி கோல் கீப்பர் துரிதமாக செயல்பட்டு தடுத்தார்.

இதனால் முதல் பாதி கோல்கள் இன்றி முடிந்தது. இரண்டாம் பாதியின் 58வது நிமிடத்தில் PSG அணிக்கு முதல் கோல் கிடைத்தது.

PSG வீரர் தலையால் முட்டி தள்ளிய பந்தை, அங்கு வந்த எம்பாப்பே (Mbappe) மின்னல் வேகத்தில் உதைத்து கோலாக்கினார்.

அதன் பின்னர் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் PSG வீரர் பிராட்லி பார்கோலா (Bradley Barcola) இரண்டாவது கோல் அடித்தார்.

இதுவே அந்த அணிக்கு வெற்றி கோலாகவும் அமைந்தது. இறுதியில் PSG 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

UEFA லீக்கில் PSG அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!