மகனின் படிப்பு விடயத்தில் மனமுடைந்த இளவரசி கேட் மிடில்டன்

இளவரசி கேட் தனது மகனின் படிப்பு குறித்து எடுத்த வேல்ஸ் இளவரசர் வில்லியம் எடுத்த முடிவால் கேட் மிடில்டன் மனம் உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் மகன் ஜார்ஜ் 13 வயதை நெருங்குகிறார்.

அரச குழந்தைகள் உறைவிடப் பள்ளிகளில் சேருவது நீண்ட காலமாக பாரம்பரியமாக இருந்து வருகிறது.

இதனால் இளவரசர் ஜார்ஜை உண்டு உறைவிட பள்ளியில் சேர்க்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியம் Eton பள்ளிக்கு அவரை அனுப்ப முடிவு செய்துள்ளார். ஆனால் கேட் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

அவர்  Eton போன்ற ஒற்றை பாலின பள்ளிகளின் ரசிகராக இல்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணம் Downe Houseயில் உள்ள பெண்கள் பள்ளியில், அவர் தனது காலத்தில் கொடுமைப்படுத்துபவர்களால் குறிவைக்கப்பட்டது தான் என்கிறார்கள்.

இந்த நிலையில் ஜார்ஜை பள்ளியில் சேர்ப்பது குறித்த விவாதத்தில் வில்லியம் வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் இளவரசி கேட் மிடில்டன் மனம் உடைந்துள்ளதாகவும் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகிறார்.

கடந்த மாதம் இரண்டாவது முறையாக கேட் தனது கணவர் மற்றும் மகனுடன் Co-Educational  பள்ளிக்கு சென்றார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள Gordonstoun-க்கு பதிலாக வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர், முதன் முதலில் Eton பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!