இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவிக்கு இரண்டாவது புற்றுநோய்

ASCOT, ENGLAND - JUNE 21: Prince Andrew, Duke of York and Sarah Ferguson, Duchess of York on day four of Royal Ascot at Ascot Racecourse on June 21, 2019 in Ascot, England. (Photo by Mark Cuthbert/UK Press via Getty Images)

The Duchess of York சாரா பெர்குசனுக்கு வீரியம் மிக்க மெலனோமா நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா பெர்குசன் (Sarah Ferguson) மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு அதற்காக அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில், 64 வயதாகும் சாராவுக்கு வீரியம் மிக்க மெலனோமா (Melanoma) புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.

மெலனோமா என்ற புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். முக்கியமாக சூரியன் அல்லது சூரிய படுக்கையில் இருந்து வரும் புற ஊதா ஒளியின் வெளிப்பாடு காரணமாக ஏற்படுகிறது.

அவருக்கு மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு இது தெரிய வந்துள்ளது. இதனை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், சாரா பெர்குசனுக்கு மேலும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும், ஆனால் அது பரவியிருக்கிறதா என்பதை தீர்மானிக்க கூடுதல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.

இதற்கிடையில், சாரா பெர்குசனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ‘அவருக்கு இது எளிதான நேரம் அல்ல; ஆனால் அவர் நல்ல மனநிலையுடன் இருக்கிறார்’ என தெரிவித்தனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!