2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! இது தான் பிளான்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அவரின் பயண திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இங்கு பார்ப்போம்.

ஹெலிகாப்டரில் பல்லடம்

இன்று மதியம் 1.20 மணிக்கு கேரளாவில் இருந்து விமானம் மூலம், மதியம் 2.06 மணிக்கு பிரதமர் மோடி கோவை சூலூர் வருகிறார். அங்கிருந்து 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார்.

‘என் மண் என் மக்கள்’ நிறைவு விழா

மதியம் 2.45 மணிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பயணம் நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பேச உள்ளார்.

மதுரை

மதியம் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூரில் காரில் வரும் பிரதமர், அங்கிருக்கு 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்தடைகிறார். 5.15 முதல் 6.15 வரை மதுரை தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து 6.15 முதல் 6.45 வரை தனியார் விடுதியில் ஓய்வு எடுக்கும் அவர், அதன்பின் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து தமிழ்நாட்டு பாஜக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தூத்துக்குடி

பிப்ரிவரி 28ம் தேதி காலை 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 9.00 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார். அங்கு 9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திருநெல்வேலி

காலை 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார். அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். அதன்பின், 11.15 முதல் 12.15 வரை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 12.30 மணிக்கு தமிழ்நாட்டு பயணத்தை முடித்துவிட்டுஇ கேரளா செல்கிறார்.

அலர்ட்டில் தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமானநிலையம், அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்கள் மத்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைக்கு பிறகே மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர். பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் பல்லடத்தில் 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!