ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பணமான 10 பில்லியன் ரூபா, வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் 02 தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் பணமில்லை. இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படாது எனவும் நாடாளுமன்று இந்த ஆண்டு கலைக்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!