அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் எதிர்காலத்திற்காக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல இன மத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்று திரண்டு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(பிப்.7) ஐந்தாவது கூட்டத் தொடரை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “2023 பெப்ரவரி மாதம் இலங்கை இருந்த நிலை, நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், தற்போது 2024 பெப்ரவரி மாதத்தில், இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

கடந்த ஆண்டு பணவீக்கம் 50.06% இருந்தது. இன்று அது 6.4ம% குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் 54.4% இருந்தது. இன்று அது 3.3% உள்ளது.

அதேபோல் அன்று டொலரின் மதிப்பு ரூ.363 இருந்தது. இன்று அது ரூ.314 ஆக உள்ளது.

நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர்.

நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுகிறோம். இருப்பினும், நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம். இதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன், பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள்.

மாற்றத்தை என்னிடம் இருந்து ஆரம்பிப்போம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்று நாட்டின் பொதுக் கனவை நினைவாக்க ஒன்றுபடுவோம். அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்” என கேட்டுக்கொண்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!