ஜே.வி.பி.க்கு கிரிக்கெட் நிதியில் இருந்து பணம் – உண்மையே என்கிறார் பிரசன்ன

ஜே.வி.பி.க்கு கிரிக்கெட் நிதியில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது.கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா ஜே.வி.பி நிதிக்கு பணம் கொடுத்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாகசபை தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில்,
நான் கிரிக்கெட் விளையாடினேன். எதிர்க்கட்சித் தலைவர் றோயல் கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடும் போது நான் ஆனந்தாவின் கிரிக்கெட் கப்டனாக இருந்தேன். 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் நானும் இருந்தேன். கிரிக்கெட் சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளேன். நான் கிரிக்கெட் சபையின் துணைத் தலைவராக இருந்தபோது திலங்க சுமதிபாலவுக்கு எதிராக ஐசிசிக்கு கடிதம் எழுதினேன். அதன் காரணமாக இன்றும் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்திருந்தால் நல்ல பணம் சம்பாதித்திருப்பேன்.
கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டது குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்த வில்லை. அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. அதுவும் விளையாட்டுத்துறை அமைச்சரின் குறைகளை கண்டு பிடிக்க அல்ல. இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பதை ஆராய்வதற்காக உபகுழு நியமிக்கப்பட்டது. இப்போது இந்தப் பிரேரணையை நாங்கள் எதிர்த்தோம் என்று தவறான கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இல்லை. இந்த பிரேரணையை கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
  இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. கிரிக்கட் பை இராஜினாமா செய்யாது. அதை எங்களால் அகற்ற முடியாது. எனவே இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையை ஜனாதிபதி கொண்டு வந்தார்.
 இந்த கிரிக்கெட் நிர்வாக சபை ஒரு மோசடி கூடாரம் என்பது நம் அனைவரின் கருத்து. எனவே இதை அகற்ற வேண்டும். ஒவ்வொருவருடைய அரசியல் இலக்குகளை அடைய முயலாமல் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கிரிக்கட் நிர்வாவாக சபை அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச போன்றவர்கள் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தாலும் வெற்றி பெற முடியாது. அதனால் தான் விளையாட்டு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறும் பகுதியை போடுங்கள் என்று ஜனாதிபதி கூறினார்.
 ஜே.வி.பி.க்கு கிரிக்கெட் நிதியில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது. கிரிக்கட்சபைத் தலைவர் ஷம்மி சில்வா ஜே.வி.பி நிதிக்கு பணம் கொடுத்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் என்னால் நிரூபிக்க முடியாது.
இன்றைய கலந்துரையாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சர்வதேச கிரிக்கெட்சபைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதை சர்வதேச கிரிக்கெட் சபைக்கு அனுப்பும் போது அரசியல் செல்வாக்கு காரணமாக அல்லாமல் இந்த திருட்டுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டிருப்பது தெரியவரும் என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!