ஷார்ஜா வாரியர்ஸை 74 ரன்னில் சுருட்டி பூரன் அணி இமாலய வெற்றி

ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் MI எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் மோதின.

MI எமிரேட்ஸ் அணி முதலில் ஆடியது. வசீம் ரன் எடுக்காமல் அவுட் ஆன நிலையில், குசால் பெரேரா மற்றும் ஆண்ட்ரே பிளெட்சர் பார்ட்னர்ஷிப் தங்கள் கூட்டணி மூலம் ஜெட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர்.

பிளெட்சர் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன அடுத்த பந்திலேயே குசால் பெரேரா 42 (25) ரன்னில் வெளியேறினார்.

கேப்டன் பூரன் அதிரடியாக 37 (29) ரன்களும், டிம் டேவிட் 20 (16) ரன்களும் விளாச, MI எமிரேட்ஸ் அணி 180 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி, அகேல் ஹொசேன் மற்றும் போல்ட் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 74 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 22 (13) ரன்கள் எடுத்தார். அகேல் ஹொசேன் 4 விக்கெட்டுகளும், போல்ட் மற்றும் வாக்கர் சலாம்க்ஹெயில் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!