32 வயதில் சர்ச்சை நடிகை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகையும், மொடலுமான பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் பூனம் பாண்டே (32).

மொடலிங் துறையில் பிரபலமான இவர், 2013 ஆம் ஆண்டு வெளியான “Nasha” என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் 2011ஆம் ஆண்டில் சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது, அந்த ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று கூறினார்.

தனது காதலர் Sam Bombay- ஐ 2020ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பூனம், போதைப்பொருள் வழக்கில் அவர் சிக்கியத்தைத் தொடர்ந்து 2021யில் அவரை பிரிந்தார்.

இந்த நிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்த பூனம் பாண்டே இன்று உயிரிழந்தார்.

இதனை அவரது மேலாளர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

32 வயதில் பூனம் பாண்டே உயிரிழந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!