பொல்லர்டின் விஸ்வரூப ஆட்டத்தினால் கராச்சி கிங்ஸ் அபார வெற்றி

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

Gaddafi மைதானத்தில் நடந்த இப்போட்டியில் லாகூர் அணி முதலில் ஆடியது.

பாக்ஹர் ஜமான் 6 ரன்னில் ஆட்டமிழக்க, வான் டெர் டுசன் 26 ரன்களில்  lbw முறையில் ஆட்டமிழந்தார். எனினும் சாஹிப்ஸடா பர்ஹான் (Sahibzada Farhan) அதிரடியில் மிரட்டினார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஷாய் ஹோப் 13 பந்துகளில் 21 ரன்களும், லிண்டே 13 பந்துகளில் 26 ரன்களும் விளாசினர்.

இதற்கிடையில் அரைசதம் அடித்த சாஹிப்ஸடா ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் லாகூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. மிர் ஹம்சா, ஹசன் அலி மற்றும் ஷம்ஸி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய கராச்சி அணியில் ஷான் மசூட் (10), வின்ஸ் (8), முகமது அக்ஹ்லாக் (7) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து முகமது நவாஸ் 15 ரன்களில் அவுட் ஆனார். ஆனால், சோயப் மாலிக் மற்றும் கீரென் பொல்லார்டு பார்ட்னர்ஷிப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

சிக்ஸர்களை பறக்கவிட்ட பொல்லார்டு 33 பந்துகளில் 58 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும்.

அதனைத் தொடர்ந்து 39 (32) ரன்கள் எடுத்த நிலையில் மாலிக் வெளியேறினார். இர்பான் கான் கடைசி பந்தில் வெற்றிக்கான ரன்னை எடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் வெற்றி பெற்றது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!