யாழில் உணவகம் ஒன்றில் உணவில் பிளாஸ்டிக்..

யாழில் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் பிளாஸ்டிக் கட்டை ஒன்று உணவில் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த உணவகத்தின் செயலை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விரைந்து செயற்பட்டு உணவுகளின் சுகாதாரம் தரம் என்பவற்றில் அக்கறை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!