“கலைஞர் 100” விழாவிற்கு ரஜினி – கமலுக்கு நேரில் அழைப்பு

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு‌.கருணாநிதி நினைவாக “கலைஞர் 100” என்ற விழாவிற்கு நடைபெறவுள்ளது.
இதற்காக சில தினங்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் “கலைஞர் 100 விழா” பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
இன்றும் பராசக்தி வசனங்கள் மூலம் கலைஞர் மு.கருணாநிதி நினைவுகூறப்படும் வேளையில், தமிழ்த்திரையுலகில் மு.கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக, தமிழ்த் திரையுலகின் சார்பாக வரும் டிசம்பர் 24ம் திகதி மாலை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் “கலைஞர் 100” நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொறுப்பாளர்கள் சார்பில் ஆர்.கே.செல்வமணி மற்றும் நடிகர் நாசர் ஆகியோர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.
அதேபோல், நடிகர் சங்க பொறுப்பாளர்கள் சார்பில் நடிகர் கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!