10 விக்கெட் வீழ்த்திய பேட் கம்மின்ஸ்! காலியான பாகிஸ்தான் அணி..

மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்களும், பாகிஸ்தான் 264 ரன்களும் எடுத்தன.

அதனைத் தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், அலெக்ஸ் கேரி 53 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 50 ரன்களும் எடுக்க, அவுஸ்திரேலியா 262 ரன்கள் எடுத்தது.

ஷஹீன் அஃப்ரிடி, மிர் ஹம்சா தலா 4 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களை ஸ்டார்க், கம்மின்ஸ் வெளியேற்றினர்.

எனினும் கேப்டன் ஷான் மசூட், பாபர் அசாம் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், பேட் கம்மின்ஸ் இந்த கூட்டணியை உடைத்தார்.

ஷான் மசூட் 60 ரன்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹேசல்வுட் ஓவரில் பாபர் அசாம் 41 ரன்களில் போல்டு ஆனார்.

பின்னர் வந்த சவுத் ஷகீல் 24 ரன்களும், ரிஸ்வான் 35 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஆக சல்மான் மட்டும் ஒருபுறம் போராட, ஏனைய வீரர்கள் கம்மின்ஸின் புயல்வேகப்பந்தில் அவுட் ஆகினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆக சல்மான் 50 ரன்கள் எடுத்தார். பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அவுஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மொத்தம் 10 விக்கெட் வீழ்த்திய பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!