கென்யாவில் 425 பேர் மரணம் தொடர்பில் மதபோதகர் கைது

கென்யாவில் 425 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், மதபோதகருடன் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஆண்டு Shakahola எனும் காட்டில் 425 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 191 பேர் குழந்தைகள் ஆவர்.

பொலிஸார் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் பெரும்பாலானோர் பசியால் இறந்ததாகவும், குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டோ, அடிக்கப்பட்டோ அல்லது மூச்சுத்திணறலாலோ உயிரிழந்ததாக தெரிய வந்தது.

இச்சம்பவம் சமீபகால வரலாற்றில் உலகின் மிக மோசமான வழிபாட்டு முறை தொடர்பிலான பேரழிவு என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேசத்தை அதிர வைத்த சம்பவத்தில் Paul Mackenzie என்ற மத போதகர் கைது செய்யப்பட்டார்.

அவர் முன்னர் டாக்சி ஓட்டுநராக இருந்திருக்கிறார். அவர் மீது ஏற்கனவே பயங்கரவாதம், ஆணவக்கொலை மற்றும் குழந்தை சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இருந்தன.

அவருடன் சேர்த்து மேலும் 29 பேரும் பிடிபட்டு, Malindi-யில் உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் Paul Mackenzie மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

Paul Mackenzie, a Kenyan cult leader accused of ordering his followers, who were members of the Good News International Church, to starve themselves to death in Shakahola forest, stands with other suspects in the dock at the Malindi Law Courts in Malindi, Kilifi, Kenya January 17, 2024. REUTERS/Stringer/ File Photo

அவர் தன்னை பின்தொடர்பவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளையும், உலகம் அழியும் முன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக பட்டினி கிடந்தது இறக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால், கைதானவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் விசாரணையை எதிர்கொள்ள மனதளவில் சரியாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!