ஹரியானாவில் கட்சி மாநில தலைவர் சுட்டுக்கொலை

இந்திய மாநிலம் ஹரியாணாவில் கட்சித்தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேசிய லோக் தாள் (Indian National Lok Dal) கட்சியின் மாநிலப் பிரிவு தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ நஃபே சிங் ரதீ (Nafe Singh Rathee).

இவர் பகதூர் என்ற இடத்தில் காரில் பயணித்தபோது, திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் நஃபே சிங் மற்றும் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு INLD கட்சித் தலைவர் Abhay Chautala கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், ‘நஃபே சிங்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் மாநில அரசு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது.

முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் பதவி விலக வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நிலத்தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!