பாகிஸ்தான் அணியை வதம் செய்த கேன் வில்லியம்சன் – மிட்செல்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இன்று முதல் டி20 போட்டியில் ஆடியது.

முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.

கேன் வில்லியம்சன் மற்றும் டேரல் மிட்செல் கூட்டணி பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து துவைத்தது.

வில்லியம்சன் 42 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசினார்.

அதேபோல் ருத்ர தாண்டவம் ஆடிய மிட்செல் 27 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் குவித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அயூப் 27 ரன்களும், ரிஸ்வான் 25 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.

ஆனால் சௌதீயின் தாக்குதல் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி நிலைகுலைந்தது.

அந்த அணி 18 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூஸிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பாபர் அசாம் 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

நியூஸிலாந்து தரப்பில் சௌதீ 4 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே மற்றும் பென் சீர்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!