பாகிஸ்தானில் 126 டிகிரி வரையில் வெப்பநிலை!

பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலை வரை உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம் இது என்று வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் அண்மைய நாட்களாக வெயிலின் தாக்கமானது அதிகமாகி வருகின்ற நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதேவேளை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னாதாக அந்நாட்டில் சில பகுதிகளில் 122 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் பலருக்கு உடல் நல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுட்டெரிக்கும் இந்த வெயிலினால் பஞ்சாப் மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சிந்து மாகணத்தில் இடம்பெறவிருந்து அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆசியாவிலேயே இரண்டாவது மற்றும் உலகின் நான்காவது அதிக வெப்பநிலை பதிவானது, கடந்த 2017 ஆம் ஆண்டு தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள டர்பட் நகரில் (129.2 டிகிரி) என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!