40,000 பாடல்கள் பாடிய பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம்! வைரமுத்து புகழாரம்

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பிரபல பாடகி பி.சுசீலாவை புகழ்ந்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழில் 1953ஆம் ஆண்டு அறிமுகமாகி 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, சாதனை படைத்த பின்னணி பாடகியாக வலம் வருபவர் பி.சுசீலா.
இவர் தனது சாதனைக்காக கலைமாமணி, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
தமிழ் மட்டும் அல்லாமல் பிற மொழிகளிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ள இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவருக்கு இந்த பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி பி.சுசீலாவை புகழ்ந்துள்ளார்.
அவர், “சொன்னது நீதானா என சொற்களுக்கிடையில் விம்மியது பொழுது என் கண்களில் வெளியேறியது ரத்தம் வெள்ளை வெள்ளையாய்
காலமகள் கண்திறப்பாள் பாடியபோது
என் எலும்பு மஜ்ஜைகளில் குருதியும் நம்பிக்கையும் சேர்ந்து சுரந்தன
நீ காதல் சிறகைக் காற்றினில் விரித்தபோது
ஒரு தேவதையின் சிறகடியில் என் காதல் சம்பவம் நிகழ்ந்தது
நீ கண்ணுக்கு மையழகு பாட வந்தபோது சந்திரனும் சூரியனும் நட்சத்திரமும் கூழாங்கல்லும்
என் தமிழும் அழகாயின
எத்துணையோ காயங்களை ஆற்றிய பிறகு உன்னை டாக்டர் என்கிறார்கள்
வாழ்க நீ அம்மா!” என கவிதை வடித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!

1 comment

கின்னஸ் சாதனை புரிந்த இந்திய பெண்! எதில் தெரியுமா? - Namthesam Tamil News December 1, 2023 - 7:09 am
[…] மிக நீளமான கூந்தலை உடையவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவர் தன்னுடைய 14வது […]
Add Comment