மூன்றே ஆண்டுகளில் 10,300 கோடி ரூபாய் மோசடி!

சைபர் மோசடி நபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10,300 கோடி ரூபாய் பணத்தை, இணையத்தை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இன்றைய சூழலில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போலியான லோன், லொட்டரி என பல வழிகளில் இணைய மோசடி நபர்கள் மக்களை ஏமாற்றி பணத்தை திருடுகின்றனர்.

இந்த நிலையில் இணைய மோசடிகள் (Cyber Crime) தொடர்பில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது.

அதன் முடிவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 10,300 கோடி ரூபாய் இணைய மோசடி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், சைபர் கிரைம் குற்றவாளிகள் இவ்வாறு மோசடி செய்த பணத்தில் 1,127 கோடி ரூபாய் வரையிலான பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ்குமார் இதுகுறித்து கூறுகையில்,

‘தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 5,000 புகார்களை தேசிய சைபர் கிரைம் போர்டலில் பதிவு செய்துள்ளனர்.

இதில் 50 சதவீதம் அளவிலான மோசடிகளை சீனா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல்கள் செய்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவில் உருவாக்கப்பட்ட செயலிகள் மூலமாக அதிகளவில் மோசடி நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!