கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.,தான் வெற்றி பெறும்: அண்ணாமலை திட்டவட்டம்

கோவை உட்பட, கொங்கு மண்டலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும், பா.ஜ.க., வெற்றி பெரும் என்பதை எழுதிக் கொடுக்கத் தயார்,” என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியில்,

தேர்தல் நெருங்கும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளதாக குற்றம் சாட்டும் தி.மு.க., 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாகக் கூறி, 33 மாதங்களாகி விட்டது. ஸ்டாலின் உட்பட தி.மு.க.இதலைவர்கள், அதை மறந்து விட்டனர்.

இது காங்கிரஸ் கட்சிக்கு, கடைசித் தேர்தல். அதனால் ராகுல் எந்த பொய்யையும் சொல்லத் தயாராகவுள்ளார். கடந்த 500 நாட்களில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். காங்., ஆளும் கர்நாடகா, இமாச்சலப் பிரதேசத்தில் அந்த அரசுகள் எதையுமே செய்யவில்லை. சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர் பிரச்னை தீர, இந்தத் தேர்தலில் எங்களுடன் அவர்கள் நிற்க வேண்டும்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான 35 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு இன்னும் தராததால், விரிவாக்கப் பணியை துவக்க முடியவில்லை. இதுபற்றி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இரு முறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டார். கோவை-கரூர் பசுமை வழிச்சாலைக்கு நிலமெடுத்துத் தராமல், அந்தத் திட்டத்தையும் எதிர்க்கின்றனர்.

பா.ஜ.க.,வுக்குப் போடும் ஓட்டு, செல்லாத ஓட்டு என்று சொன்ன அ.தி.மு.க.,வினரிடம், ‘இந்தத் தேர்தலில் உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்’ என்று கேளுங்கள்.

கொங்கு மண்டலத்தின் முதன்மையான கட்சியாக பா.ஜ.க., வளர்ந்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், அனைத்துத் தொகுதியிலும் பா.ஜ.க., வெற்றி பெறுமென்று எழுதித்தரத் தயாராகவுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!