தேர்தலில் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க., கூட்டணியில் லோக்சபா தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. மாறாக 2025ம் ஆண்டு நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளன.

இன்று சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது, இந்த தேர்தலில் திமுக., கூட்டணியை ஆதரித்து கமல் பிரசாரம் செய்வது எனவும், 2025ம் ஆண்டில் நடக்கும் ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் , லோக்சபா தேர்தலில், நானும் எனது கட்சியும் போட்டியிடவில்லை. தி.மு.க., கூட்டணிக்கு என்னுடைய அனைத்து ஒத்துழைப்பும் இருக்கும். பதவிக்காக இல்லை, நாட்டிற்காக சேர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!