உலகின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என நார்வே எம்பி மரியஸ் நில்சன் வலியுறுத்தியுள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் X நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ், கடந்த 2022ம் ஆண்டு ட்விட்டரை வாங்கி, அதை X என மாற்றம் செய்தார்.
உலகில் உள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாக இங்கு பேசலாம் என்பதை குறிப்பதற்காக X என மாற்றியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நார்வே முற்போக்கு கட்சியை சேர்ந்த எம்பி மரியஸ், “ரஷ்யா-உக்ரைன் போரின்போது செயற்கைக் கோள் தகவல் தொடர்புகளை எலன் மஸ்க் வழங்கினார். அதுமட்டுமின்றி சுதந்திரமான பேச்சு, திறந்த உரையாடலுக்கான ஆதரவு போன்ற பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி, அவருக்கு 2024ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.