பலாத்கார வழக்கில் 9 ஆண்டுகள் சிறை எதிர்கொள்ளும் நெய்மரின் சீனியர்!

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் டேனி ஆல்விஸ், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 9 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ள போகிறார்.

கடந்த ஆண்டு சனவரி மாதம் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் டேனி ஆல்விஸ் (Dany Alves).

40 வயதான இவர் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ஆவார். நட்சத்திர வீரர் நெய்மருடன் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ள டேனி, மொத்தம் 42 கோப்பைகளை அணி வென்றதற்கு காரணமாக அமைந்துள்ளார்.

டேனி ஆல்விஸ் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே டேனி கைது செய்யப்பட்டார்.

முதலில் அப்பெண்ணை யார் என்றே தெரியாது என்று அவர் கூறினாலும், பின்னர் அவரது விருப்பத்தின் பேரிலேயே உறவு கொண்டதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் டேனி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1.34 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், டேனிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும்.

ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கு இளம்பெண் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!