அடுத்த 2 மாதம்! பெற்றோர்களே மிக எச்சரிக்கை

இலங்கையில் தற்போது வறண்ட காலநிலை நிலவுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வறண்ட காலங்களில் குழந்தைகளுக்கு தோல் நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, பகல் நேரங்களில் குழந்தைகள் வெளியில் விளையாடினால், அவர்களுக்கு தேவையான அளவு தண்ணீர், திரவங்களை முறையாக கொடுக்க வேண்டும்.

இல்லையெனில், குழந்தைகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டும் உயிரிழக்க நேரிடும். இந்த வறண்ட காலங்களில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, வாந்தி, தூக்கம், பசியின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதனால், ஒரு நாளைக்கு குழந்தைகளை குறைந்தபட்சம் 2 முறை குளிப்பாட்டுங்கள். தோல் நோய் பிரச்சனை உள்ள அனைவரும் 20 நிமிடங்களில் தண்ணீரில் இருந்தால் நிலைமையை கட்டுப்படுத்தலாம்.

அடுத்த 2 மாதங்களுக்கு இந்த நிலை இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கு அதிகளவு தண்ணீர் குடிக்க வைத்து பழங்குங்கள் என அறிவுறுத்தப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!