98 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து! வரலாறு படைத்த வங்கதேசம்..

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா (8), நிக்கோல்ஸ் (1) சொற்ப ஓட்டங்களில் டன்ஸிம் ஓவரில் ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து கேப்டன் டாம் லாதம் (Tom Latham) 21 ரன்கள் எடுத்த நிலையில் சொரிபுல் பந்துவீச்சில் போல்டானார்.

பின்னர் வில் யங் 26 ரன்களில் வெளியேற, வங்கதேச அணி பந்துவீச்சில் தாக்கியது.

அதனை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 98 ரன்களில் சுருண்டது.

வங்கதேச அணியின் தரப்பில் சொரிபுல் இஸ்லாம், டன்ஸிம் ஹசன் மற்றும் சவுமியா சர்கார் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 15.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நஜ்முல் ஹொசைன் 51 ரன்களும், அனமுல் ஹயூ 37 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வங்கதேச அணி வீழ்த்தி சாதனை படைத்தது.

எனினும் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 27ஆம் திகதி தொடங்குகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!