தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வரலாற்று சாதனை

ஹாமில்டன் டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை வீழத்தி நியூசிலாந்து வரலாற்று சாதனை படைத்தது.

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் ஹாமில்டனில் நடந்தது.

தென் ஆப்பிரிக்கா 242 ரன்களும், நியூசிலாந்து 211 ரன்களும் முதல் இன்னிங்சில் எடுத்தன. பின்னர் 31 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

நியூசிலாந்துக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டேவிட் பெடிங்கம் 110 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 4வது நாளிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் 92 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து சாதனை படைத்தது.

கேன் வில்லியம்சன் 133 ரன்கள் விளாசினார். இது அவரது 32வது டெஸ்ட் சதம் என்பதால், குறைந்த இன்னிங்சில் (172) இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!