வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

வாரா வாரம் வாட்ஸ்அப்பில் சில புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன மற்றும் பல புதிய அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் (Beta Version) சோதனை செய்யப்படுகின்றன. அப்படியான ஒரு அம்சம் தான் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் (WhatsApp Favorites)!

இது பயனர்கள், தங்களுக்கு பிடித்த காண்டாக்ட்களை விரைவாக அணுக அனுமதிக்கும் ஒரு புதிய அம்சமாகும். இது மெசேஜ்களுக்கான ஃபில்டர் (Filter) ஆகவும் செயல்படும். வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த அம்சம் கால்ஸ் டேப்பிற்கு (Calls Tab) மேலே அணுக கிடைக்கும்.

இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் வந்து சேரும் என்றும், இதை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய ஃபேவரைட்ஸ்-ஐ ஆப் செட்டிங்ஸ் (App Settings) வழியாக நிர்வகிக்கலாம் மற்றும் எந்த நேரத்திலும் அவற்றை ரீஆர்டர் (Reorder) செய்யலாம் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.

வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் அம்சமானது அனைத்து வகையான சாட்களிலும் வேலை செய்யும். அதாவது நீங்கள் தேர்வு செய்வது ஒரு க்ரூப் சாட் (Group Chat) ஆக இருந்தாலும் சரி அல்லது பெர்சனல் சாட் (Personal Chat) ஆக இருந்தாலும் சரி, அதை வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ்-ன் கீழ் வரிசைப்படுத்த முடியும். அதே சமயம் அவைகளை எப்போது வேண்டுமானலும் உங்கள் விருப்பப்படி மறுவரிசைப்படுத்தவும் முடியும்.

வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது? உங்களுடைய ஃபேவரைட்ஸ் லிஸ்ட்டில் (Favorites List), ஒரு காண்டாக்ட் அல்லது ஒரு க்ரூப்பை சேர்க்க சாட் ஸ்க்ரீனில் உள்ள ‘ஃபேவரைட்ஸ்’ என்கிற ஃபில்டரை (Favorites Filter) தேர்ந்தெடுக்க வேண்டும். இதை செய்தவுடன் நீங்கள் தேர்வு செய்த காண்டாக்ட் அல்லது க்ரூப் ஆனது உங்களுக்கான ஃபேவரைட்ஸ் லிஸ்ட்டில் சேர்க்கப்படும்.

இதுதவிர்த்து ஆட் ஃபேவரைட் (Add Favorite) என்கிற ஆப்ஷனை டேப் செய்து கால்ஸ் டேப்பில் இருந்து குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்பை உங்களுடைய ஃபேவரைட்ஸ் ஆக தேர்ந்தெடுக்கவும். கடந்த சில வாரங்களில் அறிமுகமான புதிய வாட்ஸ்அப் அம்சங்களில் இது மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இது சாட்களை ‘பின்’ செய்து வைக்கும் வேலையை குறைக்கிறது.

Related posts

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணையும் கூகுள் சிஇஓ!