நெதர்லாந்து வீரர் மைக்கேல் லெவிட் அதிரடி சதம் விளாசல்!

நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீரர் மைக்கேல் லெவிட் 135 ரன்கள் விளாசினார்.

கிர்ட்டிபூரில் நெதர்லாந்து, நமீபியா அணிகளுக்கு இடையிலான T20 போட்டி நடந்து வருகிறது.

முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டௌட் 5 ரன்னில் வெளியேற, மைக்கேல் லேவிட் மற்றும் ஏங்கல்பிரட்இணை ருத்ர தாண்டவம் ஆடியது.

மைக்கேல் லேவிட் (Michael Levitt) 49 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது முதல் T20 சதம் ஆகும்.

அதேபோல் ஏங்கல்பிரட் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். சிக்ஸர்களை பறக்கவிட்ட மைக்கேல் லேவிட் 62 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் குவித்தார்.

அவது விக்கெட்டுக்கு பின்னர் சரவெடி ஆட்டம் காட்டிய ஏங்கல்பிரட் 40 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசினார்.

 

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!