நமீபியாவை 3 ரன்னில் வீழ்த்திய நேபாளம்

முத்தரப்பு டி20 தொடரில் நமீபியா அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வீழ்த்தியது.

நேபாளம், நமீபியா அணிகள் மோதிய 4வது போட்டி இன்று நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 180 ரன்கள் குவித்தது. குஷால் மல்லா 37 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாசினார்.

ஆரிஃப் ஷேய்க் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். நமீபியாவின் பென் ஷிக்கோங்கோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய நமீபியா அணி 177 ரன்கள் எடுத்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அந்த அணியின் கேப்டன் ஜேஜே ஸ்மிட் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்தார்.

பிரிலின்க் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். நமீபியா வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், கரண் கேசியின் மிரட்டலான பந்துவீச்சினால் 8 ரன்கள் மட்டுமே நமீபியாவால் எடுக்க முடிந்தது.

கரண் கேசி,சோம்பல் கமி மற்றும் திபேந்திர சிங் ஐரீ தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அரைசதம் அடித்த குஷால் மல்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!