இலங்கையில் சுகாதார ஊழியர்களின் அலட்சியம்..

இலங்கையில் பொது மருத்துவமனையான அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் அலட்சியம் தொடர்பாக வருடத்திற்கு சுமார் 600 முறைப்பாடுகள் கிடைப்பெறுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டை போன்று இந்த வருடமும் இதே போன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளர்களுக்கு சுகாதார பிரிவு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்ற போதிலும் சில பிரச்சனைகள் எழுவதாகவும் அவற்றை குறைப்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!