அதிபர் மரணம்! மக்கள் சோகம்

நமீபியா நாட்டின் அதிபர் ஹேஜ் கீங்கோப்(82) இன்று(பிப்.4) அதிகாலை மரணம் அடைந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹேஜ் கீங்கோப் அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமானதால், அந்நாட்டின் தலைநகர் தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள பிரபல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் துணை அதிபர் நங்கோலோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் முறையாக அதிபரான ஹேஜ் கீங்கோப், அதன்பின் 2வது முறையாக மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் மரணம் நமீபியா நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!