ஜனாதி வேட்பாளர் ஆகிறார் நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்பி சட்டத்தரணி சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டே கொட, இந்திக்க அனுருத்த, ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி ரோஹன திஸாநாயக்க, மாத்தளை மாவட்ட இலங்கை பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, வரும் பொதுத்தேர்தலில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு,அக்கட்சியின் பிரதிநிதிகள் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கை பயன்படுத்தி வரும் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கட்சி பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

அதேசமயம், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜனக பண்டார தென்னகோன், அவரது மகன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!