மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல்..

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்குமாறு கட்சியின் பெரும் பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதனடிப்படையில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் கட்சியின் பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர்.

எனவே கட்சியை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!