என் அன்பு தாய்! ரஜினி பகிர்ந்த நெகிழ்ச்சி புகைப்படம்

‘லால் சலாம்’ படம் இன்று வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி தனது X தளத்தில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது, ஐஸ்வர்யா தன் உடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும், அதில், “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

‘லால் சலாம்’ படத்தின் விழா ஒன்றில்கூட ஐஸ்வர்யா ரஜினியை தனது இரண்டாவது தாய் என ரஜினி உணர்ச்சிவசப்பட்டு பேசியது இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!