ஹோபன்ஹெய்ம் அணியை அலறவிட்ட முசியாலா!

பண்டஸ்லிகா தொடரில் ஹோபன்ஹெய்ம் அணிக்கு எதிரான போட்டியில் பாயர்ன் முனிச் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Allianz Arena மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் ஹோபன்ஹெய்ம் (Hoffenheim) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 18வது நிமிடத்திலேயே பாயர்ன் வீரர் ஜமால் முசியாலா (Jamal Musiala) அடித்த கிக், கோல் போஸ்டின் கம்பத்தில் பட்டு கோலாக மாறியது.

அதன் பின்னர் ஹோபன்ஹெய்ம் நெருக்கடி கொடுத்ததால் முதல் பாதியில் பாயர்ன் அணியால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை.

ஆனால் இரண்டாம் பாதியில் பாயர்ன் முனிச் வீரர்கள் மிரட்டினர். 70வது நிமிடத்தில் முசியாலா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 74வது ஹோபன்ஹெய்ம் வீரர் Grischa Promel, பாயர்னின் Mathys Telயின் காலை மிதித்தார். இதனால் உடனடியாக அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பப்பட்டார்.

90வது நிமிடத்தில் பாயர்னின் ஹரி கேன் மிரட்டலாக கோல் அடித்தார். இதன்மூலம் பாயர்ன் முனிச் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹோபன்ஹெய்ம்-ஐ வீழ்த்தியது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!