RCB அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

WPL தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. எல்லிஸி பெர்ரி 44 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், தொடக்க வீராங்கனை யஸ்டிகா பாட்டியா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசினார்.

ஹேலே மேத்யூஸ் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் நட் சிவர் 27 ரன்கள் எடுத்த நிலையில் வார்ஹம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் அமெலியா கெர் அதிரடியில் மிரட்டினார். பவுண்டரிகளை விரட்டிய அவர், ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.

இதன்மூலம் 15.1 ஓவரிலேயே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை அமெலியா கெர் வென்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!