முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களில் வயது பாலினம் (ஆண், பெண்) ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா நீதிமன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (14) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா குறித்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் இந்த அகழ்வுப்பணி தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த அகழ்வுப்பணிக்கான செலவுகள் குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அந்த வீதி உடைக்கப்பட்டு திருத்தப்படுவதற்கு தேவையான பணம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!