வெள்ளத்தில் மூழ்கியது முல்லை!!

நாட்டில்(இலங்கையில்) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

அங்கு பெய்துதவரும் கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள, அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்துள்ளன.
குளங்கள் அனைத்தும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முல்லையில் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் திடீரென உருவான வெள்ளம் காரணமாக, ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம், பண்டாரவன்னி உள்ளிட்ட கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன்.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினர் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .
குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலையில், குளங்கள் பல உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
வான் பாய்கின்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்,  குடியிருப்புகளுக்குள் நீர் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையால் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!