தமிழ்நாட்டில் 35,000 கோடி முதலீடு செய்துள்ளது முகேஷ் அம்பானி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி.

இவர் ஜியோ உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் 35,000 கோடி முதலீடு செய்துள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட காணொளி வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி இதனை தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டன.

புதிய நிறுவனங்கள் தொடங்கவும், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகரிக்கவும் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டன.

இந்த நிலையில், காணொளி காட்சி மூலம் உரையாற்றிய முகேஷ் அம்பானி,

‘தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடி முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது’ என தெரிவித்தார்.

Related posts

ரூ.80,000 கோடியுடன் களமிறங்கும் அதானி குழுமம்!

ஆனந்த் அம்பானியின் மிரளவைக்கும் வாட்ச் கலெக்சன்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பிசோஸ் மீண்டும் முதலிடம்