திஸ்ஸமஹாராம பகுதியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (21) திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் இடம்பெற்றுள்ளது. 32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கற்குழியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.