அதிக Uninstall செய்யப்பட்ட செயலிகள்! முதலிடம் எது தெரியுமா?

சமீப காலமாக சமூக வலைதளங்களில் மக்கள் அதிகம் நாட்டம் கொண்டு பல செயலிகளை பதிவிறக்கினாலும், பல செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் ஆய்வில், பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை Install மற்றும் Uninstall செய்கின்றனர் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும்இ ஒட்டுமொத்த Internet பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும்.

மேலும், சராசரியாக ஒருவர் இரண்டு மணி நேரம் ஒரு செயலியை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் (Instagram) Account-ஐ Delete செய்வது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர் என்பது கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமை தொடர்ந்து Snapchat தளத்தை பயன்படுத்துவோரில், சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது Snapchat Account-ஐ எப்படி Delete செய்ய வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர்.

எனவே , இந்த அறிக்கையை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்ஸ்டாகிராம் அதிகப்படியாக Uninstall செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!