உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் !!

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் பறந்த தொடராக நடப்பு உலகக்கோப்பை தொடர் உருவாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக 500 சிக்சர்கள் விளாசப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
இதற்கு முன்னர், 2015ல் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்திய உலகக்கோப்பை போட்டித் தொடரில் 463 சிக்சர்கள் விளாசப்பட்டதே சாதனையாக இருந்தது.
ஆனால், இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் முடிவதற்கு முன்னரே இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லும் தலா 22 சிக்ஸர்கள் விளாசி, தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களாக உள்ளனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!