சீனாவில் 100க்கும் மேற்பட்ட கார்கள் விபத்து

சீனாவில் பனி மழை காரணமாக 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் குவிந்து விபத்திற்குள்ளாகின.

ஆசிய நாடான சீனாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர்வாட்டி வருகிறது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்திர புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்கு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர்.

சுஜோ நகரில் உள்ள எக்பிரஸ் சாலையில் பனிமழை பெய்ததால், சாலை முழுவதும் பனி படர்ந்துள்ளது.

இதனால் அங்கு பயணித்த சில வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் சறுக்கி விபத்தில் சிக்கின. பின்னர் வந்த வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.

இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாகவும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பொலிஸார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!