மோடியின் முட்டாள்தனமான யோசனை: சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவில் தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பளித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு பாஜக ஆட்சியில் தேர்தல் பத்திரம் என சட்ட திருத்தம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள் நன்கொடை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக தேர்தல் பத்திரங்கள் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை வெளியிடப்பட்டன. ஆனால், இந்த பத்திரங்கள் வாங்குபவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது.

இதனால், இந்த பத்திரம் திட்டம் வெளிப்படைத்தன்மை இல்லை. எந்த கட்சிகள் எவ்வளவு வாங்கியுள்ளன என்பது தெரியாமல் இருந்து. இதில் பாஜகவே அதிக நன்கொடைகளை பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில்இ இந்த தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த நவம்பர் 2ம் தேதி முடிந்த நிலையில், இன்று சற்று முன் தீர்ப்பு வெளியானது.

அதில், தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஓ தளத்தில், “கட்சிக்காக மோடி பதவி விலக வேண்டும். தேர்தல் பத்திரம் மோடியின் முட்டாள்தனமான யோசனை. ஊழலுக்கு எதிராக போராடும் பாஜகவின் கூற்றை பொய்யாக்கும் விதமாக ஒரு பெரிய ஊழலாக மாறியதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நான் நினைக்கிறன்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!