கோட்டையில் கால் வைக்கும் மோடி! பால ராமரையும் தரிசிக்கிறார்!

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையான எட்டாவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றும் நிலையில், மாலை அயோத்தியில் பால ராமரை தரிசித்து விட்டு, அங்கு நடைபெறவுள்ள சாலை பேரணியில் பங்கேற்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றிருக்கிறது. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜக காங்கிரஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக ஒருபோதும் வெற்றி பெறாத சமாஜ்வடி கட்சியின் கோட்டையான மெயின்புரியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ நடத்தினார். இந்நிலையில் அந்த தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்களது அனைத்து பேரணிகளிலும், முலாயம் சிங் யாதவின் குடும்ப அரசியலை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையான எட்டாவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றும் நிலையில், மாலை அயோத்தியில் பால ராமரை தரிசித்து விட்டு, அங்கு நடைபெறவுள்ள சாலை பேரணியில் பங்கேற்கிறார். எட்டாவாவுக்குப் பிறகு, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சீதாபூரில் நடைபெறும் பேரணியிலும் உரையாற்றுகிறார்.

அதன்பின், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, ரோட்ஷோ நடத்துவார். கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் கோவிலில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!